Welcome to Portal Experts | Vishwak.com |Blogs

Live Search

Venkatarangan TNC

ஸ்ரீமுஷ்ணம் - Sri Mushnam Temple

போன சனிக்கிழமை குடும்பத்தோடு நாங்கள் ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குச் சென்று இருந்தோம். ஸ்ரீமுஷ்ணம் என் பாட்டியின் பிறந்த ஊர், ஆனால் இதுவரை நாங்கள் பலர் அங்கேப் போனதில்லை. இந்த முறை உறவினர் ஒருவர் அழைப்பை ஏற்று அங்கே போயிருந்தோம், நல்ல தரிசனம் கிடைத்தது.

வைஷ்ணவத்தில், இந்தப் பூலோகத்தில் சுயம்பக்த (சுயம்பு, தான்தோன்றி, Natural, Not man made) ஷேத்ரங்கள் (புனிதத் தலங்கள்) என எட்டு ஷேத்ரங்கள் பெரியவர்களால் கூறப்பட்டுள்ளது.  அதில் ஸ்ரீமுஷ்ணம் (துயத் தமிழில் திருமுட்டம்) விசேஷமான ஒன்று, விருதாசலத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது. சென்னையிலிருந்து விருதாசலம் 220 கிலோமீட்டர் தூரம் - NH45ல் சென்று விழுப்புரம் தாண்டியப் பிறகு உளூந்தூர்பேட்டையில் இடது (Left) பக்கம் திரும்பி 20 கிலோமீட்டர் செல்லவேண்டும்.

இங்கே இருக்கும் புஷ்கரணி (குளம்) - பூமியை பெருமாள் (விஷ்ணுவின் அவதாரமான பூவராக சுவாமி தூக்கும் போது பெருமாளின் வேர்வையிலிருந்து உருவானதாக ஐதிகம் (நம்பிக்கை).  இங்குள்ள ஸ்ரீ வராஹ பெருமாளை (மூலவர்) வேண்டினால் சொத்து ஸம்பந்தமான தடைகள், பிரச்னைகள் விலகும், பூமி/சொத்து இவை கிடைக்கும் என்பது ஐதிகம். அதுப்போல குளத்தின் அருகிலிருக்கும் அரசமத்தின் அடியில் சேவைத் தரும் அஸ்வத்தநாராயணனின் (ஸ்ரீ நரசிம்மர் சுவாமி) சந்நிதிச் சென்று பிரார்த்தனைச் செய்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதிகம்.

SRIMUSHNAM Koil Lake
(கோயில் புஷ்கரணி குளம்)
SRIMUSHNAM Kopuram  
(ஸ்ரீ பூவராக சுவாமி கோயில் கோபுரம்)

Inside Anandha Lodge where we stayed, this is the only decent hotel we were told is in Vridhachalam
(நாங்கள் தங்கியிருந்த ஆனந்தா லாட்ஜ்)

SRIMUSHNAM 020
(ஸ்ரீ அஸ்வத்தநாராயணனின் சந்நிதி)
Share this post: email it! | del.icio.us! | digg it! | newsVine!

Read the complete post at http://www.venkatarangan.com/blog/2008/08/16/ஸரமஷணம+Sri+Mushnam+Temple.aspx

Copyright ©2008
Vishwak Solutions Pvt. Ltd.
All rights reserved.